கவிதைகள்


தனிமையின் தவிப்புக்கள்
கண்களும்  கதை பேசும்
உதடுகளும் நிலை அறிந்து  தயக்கத்துடன்
வெட்கத்தில் சிவக்க
காதல் பயணம்  பேசுகிறது

உன்னிடம் நான் கேட்பது
காதல் முத்தம்

காதலை பகிர்ந்து கொள்ள
அதை நீயும் உணர்ந்து கொள்ள

கன்னத்தில் காதல் முத்தம் கண்களில் காமத்தின் முதல் முத்தம இதழ்களில் உச்சக்கட்டத்தில் முத்தம் செவிகளில் கிளர்ச்சி செய்யும் முத்தம கழுத்தினில் காமத்தை பெருக்கும் முத்தம முத்தங்களை கவிதையில் சேர்ப்பவன் பித்தன்

விளக்கை அணைத்துவிட்டு
வந்து
கவிதை சொல்
இரவு கரைகிறது
விடியல் வருகிறது
அதன் முன்
கவிதையை
திருத்தி நிறுத்தி களிப்போம் ...!!!


மாயமில்லை, மந்திரமில்லை! மயக்கும் தன்மை என்னிடம் இல்லை! மயக்கும் தன்மையை அவனிடம் தந்து - என்னை மயங்க வைத்தவன் எவனோ? அதை காதல் என்று சொல்லவா இல்லை காமம் என்று சொல்லவா? அவனிடம் மயங்கிவிட்டேனே - இதை பிழை என சொல்லவா? இந்த மயக்கத்தில் தப்பியவள் எவரேனும் உண்டா? - இல்லை


என்னவனுக்காக நான் சமையல் செய்யும் வேளையில் தீடிரென்று பின் இருந்து அவன் என் இடை அழுத்தி.. சரிந்த குழல் நகர்த்தி.. கழுத்தின் மேல் சற்றென்று கள்வன் அவன் இடும் சத்தமில்லா முத்தத்திற்கு நான்நான் மயங்காத நாளே இல்லை!!!
உன்னை மனதார காதலிப்பதும் உடல் அளவில் காமம் கொள்வதும் கண் கலங்காது உன் கை கோர்த்து காலம் கடப்பதும் தான் என் வாழ்க்கை



தொலைந்தது எதுவென்றே தெரியாமல் தேடிக் கொண்டிருக்கிறேன். தொலைந்ததின் ரூபம் நிறம் மணம் எதுவும் ஞாபகமில்லை மழையில் நனைந்த பறவையின் ஈரச் சிறகாய் உடஹ்ரைத் துடிக்கும் மனதுக்கு தேடுவதை நிறுத்தவும் திராணியில்லை எனக்கோ பயமாயிருக்கிறது தேடியது கிடைத்தபின்னும் கிடைத்தது அறியாமல்

கட்டி கரும்பே என்றாயே கடித்தே கன்னம் சிவந்ததுவே! கொட்டிக் கிழங்கே என்றாயே கொடுத்த இதழை விட்டாயா? எட்டிப் போக நினைத்தாலும் எட்டிப் பிடித்து விட்டாயே! தட்டிப் போக எண்ணவில்லை

N தவியாய் தவித்தேன் உன்னிடத்தில்!